உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நமது வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து ஆவி பிடித்தாலே நம்மை நெருங்காது என்பது பலருக்கும் தெரியவில்லை.
கொரோனா வைரஸ் முதலில் தாக்குவது, தொண்டையை தான். அதிலிருந்து தான் நுரையீரலை தாக்க ஆரம்பிக்கின்றது. ஆதலால் தொண்டையை தாக்கவிருக்கும் நிலையில் ஆவி பிடிக்கும் முறையினை நாம் தொடங்கிவிட வேண்டும்.
இன்றைக்கு பெரும்பாலான ஸ்டார் ஹோட்டலில் எல்லாம் ஸ்டீம் பாத் எனப்படும் நீராவி குளியல் என்பது கட்டாயம் இருக்கும். நீராவி குளியலை எடுத்துகொண்டால், நமது தோலின் மேற்புறத்திலுள்ள கிருமிகள் அனைத்தும் அழிந்துவிடும்.
மேலும் உடலையும் மனதையும் நாள் முழுவதும் புத்தணர்ச்சியை கொடுக்கும், அதோடு உற்சாகத்தை அளிக்கும் என்பதால் தான். இது சுமார் ஐம்பது ஆண்டுகளாக பழக்கத்தில் இருக்கும் நடைமுறை ஆகும். இது வெளிநாட்டு பழக்கமுறையாகும்.
பழங்காலத்தில் இருந்தே தமிழர்கள் பின்பற்றி வரும் மிகச்சிறந்த மருத்துவ முறையாகும். ஒரு காலத்தில் ஒரே தும்மல், தொடர்ச்சியான இருமல், தலை வலி, தலை பாரம் என்றால் வீட்டு பெரியவர்கள், ஆவி பிடித்தால் எல்லாம் சரியாகிவிடும் என்பார்கள்.
இயற்கையான முறையில், தலைவலி, உடல் வலி, சளித் தொந்தரவு, இருமல் என எதுவாக இருந்தாலும் சரி முதலுதவியாக செய்து வருவது ஆவி பிடிப்பது தான்.
அதோடு, இயற்கையாக எளிய முறையில், நமது சருமத் துளைகளுக்குள் இருக்கும் அழுக்குகளையும் நோய்க் கிருமிகளையும் வெளியேற்ற நம் முன்னோர்கள் கையாண்ட மிக எளிய வைத்திய முறை தான் ஆவி பிடித்தல் ஆகும். இது பைசா செலவழிக்காமல் நம் முன்னோர்கள் கையாண்ட கை வைத்திய முறையாகும்.
ஆவி பிடிப்பதால் நம் உடலில் ஒட்டிக்கொண்டிருந்த நோய்க்கிருமிகள் முற்றிலும் அழிக்கப்பட்டு விடும். வீட்டிலேயே வாரத்திற்கு ஒரு முறையாவது ஆவி பிடித்தால் முகப்பொலிவு கூடும். அதோடு முகச்சுருக்கம் மற்றும் முதுமைத் தோற்றத்தையும் தவிர்க்கலாம்.
இருமல், ஜலதோஷம், சளித் தொந்தரவு, தலைவலி மற்றும் உடல் அசதி உள்ளவர்கள் அனைவரும் ஆவி பிடித்தால் நிமிட நேரத்தில் இதெல்லாம் பறந்தொடிவிடும். இதை காலை வேளையிலும், இரவு தூங்கச் செல்வதற்கு முன் சிறிது நேரம் ஆவி பிடித்துவிட்டால் போதும் விரைவில் நோய் குணமாகும். மேலும், இதனை தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் செய்துவரவேண்டியது அவசியமாகும்.
பாத்திரத்தில் கொதிக்க வைக்கும் சூடான நீரில் மஞ்சள், வேப்பிலை, துளசி, நொச்சி இலை இவற்றினை போட்டு வரும் ஆவியை நன்கு மூக்கு மற்றும் வாய் மூலமாக உள்ளிழுக்க வேண்டும். இவ்வாறு ஆவி பிடிப்பதால் கொரோனா நம்மை நெருங்கவும் செய்யாது என்பதை நீங்கள் கண்கூடாக அவதானிக்கலாம்.