பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் Covid-19 தொற்றினால், 50ஆயிரத்து 9 பேர் பாதிக்கப்பட்டதோடு 115 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரித்தானியாவில், இதுவரை மொத்தமாக 86 இலட்சத்து 41ஆயிரத்து 221 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 1இலட்சத்து 39ஆயிரத்து 146 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 14இலட்சத்து 44 ஆயிரத்து 489 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 872 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
கடந்த 24 மணித்தியாலத்தில் 28ஆயிரத்து 875 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அத்துடன் இதுவரை Covid-19 தொற்றிலிருந்து மொத்தமாக, 70 இலட்சத்து 57ஆயிரத்து 586 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.