பிரித்தானியாவின் நியூகேஸில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் நோயாளிகள் படுக்கைக்காக 8 அல்லது 9 மணிநேரம் காத்துக்கிடப்பதாக வைத்தியர் ஒருவர் வேதனை தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் நியூகேஸில் உள்ள ராயல் விக்டோரியா வைத்தியசாலையில் (ஆர்விஐ) இந்த மோசமான சூழல் நிழவுகிறது. வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது,
இதேவேளை, கொரோனா மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுநோய் காரணமாக நோயாளிகள் பலர் அறுவை சிகிச்சை மற்றும் சிகிச்சை மேற்கொள்ள முடியாமல் போனதே தற்போதைய அழுத்தங்களுக்கு காரணம் என கூறப்படுகிறது
நியூகேஸில் வைத்தியசாலை அறக்கட்டளையின் மருத்துவ இயக்குனர் வைத்தியர் Chris Gibbons கூறியதாவது, தற்போதைய நோயாளிகளின் அனுமதி எண்ணிக்கை குளிர்காலத்தில் நாம் பார்த்ததை விட அதிகமாக உள்ளது.
நியூகேஸில் ஆர்விஐ அவசர சிகிச்சை பிரிவில் தற்போதைய நிலைமை மிகவும் மோசாமாக உள்ளது. படுக்கைகளுக்காக நோயாளிகள் எட்டு அல்லது ஒன்பது மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சில சந்தர்ப்பங்களில், நோயாளிகள் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்கு வந்த பிறகு நான்கு, ஐந்து அல்லது ஆறு மணிநேரம் மட்டுமே சிகிச்சை பெறுவதாகவும், நாங்கள் கண்டிராத அளவிற்கு அவசர சிகிச்சைப் பணியாளர்கள் மீதான அழுத்தங்கள் அதிகரித்து இருப்பதாகவும் Chris Gibbons தெரிவித்துள்ளார்.