இந்த உலகில் வசிக்கும் பலரில் விபத்துகள் மூலம் அடிப்பட்டு உடல் உறுப்புகள் பற்றாக்குறையால் இறந்து வருவது அதிகமாகிவிட்டது.
இதனிடையே, உடல் உறுப்பு பற்றாற்குறை அதிகமாக இருக்கும் சூழ்நிலையில், தானம் செய்பவர்கள் குறைவாகவே இருக்கின்றனர்.
அந்த வகையில், அமெரிக்கா, நியூயார்க் நகரில் வசித்து செயல்படும் என் ஒய்யூ லேங்க் ஒன் ஹெல்த் ( N.Y.U. Langone Health) நிறுவனத்தில் பெண்ணிற்கு, பன்றியின் கிட்னியை பொறுத்தும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இதில், மூளைச்சாவு அடைந்த பெண் ஒருவருக்கு பன்றியின் கிட்னியை பொறுத்தி, கண்காணித்துள்ளனர். அப்போது பன்றியின் கிட்னியும், மனிதனுடைய கிட்னியும் எதிர்மறையாக செயல்பட்டதால், அதை மாற்றி பொறுத்தி செயல்படுத்தினர்.
அப்போது, 3 நாட்கள் கண்காணித்ததில் பன்றியின் கிட்னி சரியாக செயல்பட்டதால், சாதனை படைத்த மருத்துவர்கள் இதை நடைமுறைக்கு கொண்டு வருவதை செயல்படுத்த ஆரம்பித்துள்ளனர்.
இதற்கு அனுமதி அளித்தால் இனி வருங்காலத்தில் பன்றி கிட்னி மனிதனின் செயல்பாட்டுக்கு வந்து வெற்றியடையும்..