நந்தா, ஆஷா கெளடா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் தொடர் கோகுலத்தில் சீதை.
இதுநாள் வரையில் ஜி தமிழின் மற்ற சீரியல்களான செம்பருத்தி, சத்யா, ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி ஆகிய தொடர்கள் மட்டுமே டி.ஆர்.பி.,யிலும் முன்னணி இடங்களை பிடித்து வந்தன.
இந்நிலையில் தற்போது மற்ற ஜி தமிழ் சீரியல்களை ஓவர்டேக் செய்து ‘கோகுலத்தில் சீதை’ தொடர் சேனல் அளவில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது.
‛மெகா திருமண வைபவம்’ என்ற ஜி தமிழின் புதிய யுக்தியில் பல சீரியல்களில் குறிப்பிடும் படியாக சில திருமணங்கள் ஸ்பெஷல் எபிசோடுகளாக ஒளிபரப்பாகிறது.
அந்த வகையில் கோகுலத்தில் சீதை இதற்கு முன் எடுத்த டிஆர்பியை விட அதிகமாக எடுத்து ஜி தமிழின் நம்பர் 1 தொடராக தேர்வாகியுள்ளது.