தங்க நகைகளை எப்போதும் பாதுகாப்பு என்ற போர்வையில் அலுமாரியில் பூட்டி வைத்திருப்போம்.
பாதுகாப்பு என்பது தங்க நகைகளை அதன் மதிப்புக்கு ஏற்ப தனி வகையான பாதுகாப்புக்கு உட்படுத்துவது.
ஒவ்வொரு நகையும் அதற்குறிய நகை பெட்டியில் வைத்து பாதுகாப்பதே சிறந்தது. நகைகளை ஒட்டுமொத்தமாய் ஒரே பெட்டியில் குவியலாக வைத்து பாதுகாக்க கூடாது.
ஒரு நகையுடன் இன்னொரு நகையின் மீது உராயாமல் தனித்தனியே வைத்திட வேண்டும்.
அதற்குரிய பெட்டியில் வெள்ளை பருத்தி துணி மூடி பாதுகாப்பது அவசியம். கல் வைத்த நகைகள் மற்றும் எனாமல் பூசிய நகைகள் என்றாலும் மெல்லிய துணி மூடி பாதுகாப்பது அதன் பொலிவு குறையாமல் பாதுகாக்க வழியாக இருக்கும்.
நகைகளை அணிந்து சென்று வந்த பிறகு மறுபடியும் பெட்டியில் வைக்கும் முன் நன்றாக வெள்ளை துணியில் துடைத்து வைக்கவும்.
காதணிகளின் திருகாணி, தண்டு பகுதிகள் எண்ணெய் பிசுக்குடன் இருக்கும். உடனே துடைத்து விட்டால் அழுக்கு சேராது. நகைகளுக்கென பிரத்யோக பாதுகாப்பு வழிமுறை குறிப்பிடப்பட்டபடி செயல்பட வேண்டும்.
தங்க நகைகளை எப்படி தூய்மை செய்வது?
தங்க நகைகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் திறம்பட தூய்மை செய்திடல் வேண்டும்.
பொதுவாக நாம் குளிக்கும்போது, தூய்மை பணிகளில் ஈடுபடும்போது நகைகளை கழற்றி வைத்து விட்டு அப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
ஏனெனில் சோப்பு மற்றும் கிளனர்களில் உள்ள இராசாயனங்கள் தினம் படும்போது நகையின் பொலிவை குறையைச் செய்வதுடன் தேய்மானம் ஏற்படவும் செய்யவும்.
அதிக அழுக்கு சேர்ந்து பொலிவு குறைவான நகையை மட்டும் தூய்மை செய்திடல் வேண்டும்.
சில நகை கடைகள் நகையை அம்மோனியா கலந்த நீரில் ஊற வைத்து கழுவ அனுமதி வழங்கும்.
சில நகைகடைகள் அம்மோனியா நீரில் கழுவுதல் கூடாது என தெரிவிக்கும்.
எதுவாயினும் மென்மையான பாத்திர டிடர்ஜென்ட் தண்ணீரில் கலந்து அதில் நகைகளை ஊற வைக்க வேண்டும்.
மெல்லிய சாப்ட் பிரஷ் கொண்டு ஊறிய நகைகளை மெதுவாக தேயத்து கழுவி விட நகைகள் அழுக்கு நீக்கி பளிச்சிடும்.
அதுபோல் வணிக ரீதியிலான நகை கழும் கிளனர்கள் கிடைக்கின்றன.
அதனை வாங்கி அதில் குறிப்பிட்டுள்ளபடி, கழுவுதல் வேண்டும். கல் வைத்த மற்றும் இதர உலோக நகைகள் எனில், நகை கடையில் கொடுத்து சுத்தம் செய்து கொள்வது நல்லது.