இரத்தினபுரி மாவட்டத்தில் டெங்கு நோய் பரவும் அவதானம் அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறை உத்தியோகத்தர்கள் தெரிவிக்கின்றனர்.
குடியிருப்புக்களுக்கு அண்மித்த பிரதேசங்கள் கைவிடப்பட்டுள்ள இரத்தினக்கல் குழிகள் அரச தனியார் நிறுவனங்கள் வணக்கஸ்தலங்களுக்கு அண்மையில் இந்த அவதான நிலை அதிகமாக காணப்படுவதாக தெரிவிக்கின்றனர். இரத்தினபுரி மாவட்ட தொற்று நோய் தடுப்புப் பிரிவு துண்டுப் பிரசுரங்கள் மற்றும் தகவல் குறிப்புக்கள் மூலம் அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்த அவதான நிலை குறித்து அரச தனியார் நிறுவனங்களுக்கும் பொது மக்களுக்கும் தேவையான அறிவுரைகள், ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்ற போதிலும் இவற்றை இவர்கள் அலட்சியம் செய்வதனால் இந்த அவதான நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் இக்குறிப்புகளில் தெரிவிக்கப்பட் டுள்ளன. சுகாதார தரப்புகளின் அறிவுறுத்தல்களை ஏற்காது டெங்கு நோய் பரவுவதற்கான அவதானத்தை அதிகரிக்கும் அனைவருக்கும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும் அவர்களுக்கு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்வதாகவும் இக்குறிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.