உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸான ஏ.வை.4.2 வகை 42 நாடுகளில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது முதல் பல்வேறு வகைகளில் உருமாறி வருகிறது. அந்தவகையில், தற்போது உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸான ஏ.வை.4.2 வகை பிரிட்டனில் அதிகமாகப் பரவி வருகிறது.
இந்தியாவிலும் 17 பேருக்கு இந்த புதிய வகை கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் மொத்தமாக 42 நாடுகளில் ஜூலை 21 முதல் ஒக்டோபர் 25 வரை 26,000 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதில், 93 வீதமான பாதிப்பு பிரிட்டனில் ஏற்பட்டுள்ளது என்றும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. மேலும் ஜெர்மனி, போலந்து, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் புதிய வகை கொரோனா பாதிப்பு உள்ளது.
டெல்டா வகை கொரோனாவை விட ஏ.வை.4.2 வகை கடும் பாதிப்பைக் கொண்டது என்று கணிக்கப்பட்டுள்ளது. புதிய வகை கொரோனா குறித்து பிரிட்டனில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.