கம்பளை, குறுந்துவத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெட்டகேதெனிய பகுதியில் பொலிஸார் கஞ்சா வளர்ப்பில் ஈடுபட்ட நபரைக் கைது செய்துள்ளனர்.
வீட்டு தோட்டம் என்ற பெயரில் கஞ்சா செடி வளர்ப்பில் ஈடுபட்டுவந்த 29 வயது நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். மரக்கறி மற்றும் தேயிலை செடிகளுக்கு மத்தியிலையே சுமார் 4 அடி நீளத்தில் இரு கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறுந்துவத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.



















