சின்ன வெங்காயம் சைவம் மற்றும் அசைவம் என எல்லா சமையல்களிலும் பயன்படுத்தக் கூடிய அற்புதமான காயாகும்.
இக்காயின் தனிப்பட்ட சுவையின் காரணமாக சமையலில் இது முக்கிய இடத்தினைப் பெறுகிறது. சின்ன வெங்காயமானது லேசான இனிப்பு கலந்த கார சுவையினைப் பெற்றுள்ளது.
சின்ன வெங்காயத்தில் விட்டமின் ஏ, பி6(பைரிடாக்ஸின்), சி ஆகியவை அதிகளவு உள்ளன. விட்டமின்கள் பி1(தயாமின்), பி2(ரிபோஃப்ளோவின்), பி3(நியாசின்), பி5(பான்டோதெனிக் அமிலம்), ஃபோலேட்டுகள் போன்றவை காணப்படுகின்றன.
இதில் தாதுஉப்புக்களான இரும்புச்சத்து, தாமிரச்சத்து, மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம் ஆகியவை அதிகமாக உள்ளன. மேலும் இதில் கால்சியம், மெக்னீசியம், செலீனியம், துத்தநாகம் போன்றவையும் காணப்படுகின்றன.
இதில் பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது. அந்தவகையில் தற்போது சின்னவெங்காயம் சாப்பிடுவதனால் ஏற்படும் மருத்துவப்பயன்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.