கொழும்பு துறைமுகத்தில் அத்தியாவசிய பொருட்களை தாங்கிய கொள்கலன்கள் பெரும் எண்ணிக்கையில் தேங்கிக் கிடப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
டொலர் பிரச்சினை காரணமாக துறைமுகத்திலிருந்து விடுவித்துக் கொள்ள முடியாத கொள்கலன்களே இவ்வாறு தேங்கிக் கிடக்கின்றன.
சுமார் ஒரு மாத காலமாக இந்தப் பொருட்கள் துறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த கொள்கலன் தொகையில் பத்தாயிம் தொன் எடையுடைய 350 சீனி கொள்கலன்களும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் சீனிக்கு நிலவி வரும் பற்றாக்குறைக்கு துறைமுகத்திலிருந்து கொள்கலன்கள் விடுவிக்கப்படாமையே காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
டொலர் தட்டுப்பாடு காரணமாக ஏற்கனவே துறைமுகத்தில் கொள்கலன்கள் தேங்கிக் கிடந்தமையினால் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதுடன் பொருட்களின் விலைகளும் உயர்வடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.