சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்கும் வகையில் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
நேற்று இரவு இது தொடர்பிலான விசேட வர்த்தமானி வெளியாகியுள்ளது. இதன்படி, செப்டம்பர் 2ம் திகதி அமுல்படுத்தப்பட்ட சீனிக்கான கட்டுப்பாட்டு விலைகள் நீக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலைகளின்படி, வெள்ளை சீனி ஒரு கிலோ (பொதி செய்யப்படாத) 122 ரூபாவாகவும், பொதி செய்யப்பட்ட ஒரு கிலோ வெள்ளை சீனி 125 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட்டன.
அத்துடன், பொதி செய்யப்படாத ஒரு கிலோ சிவப்பு சீனியின் விலை 125 ரூபாவாகவும், பொதி செய்யப்பட்ட ஒரு கிலோ சிவப்பு சீனி 128 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், குறித்த விலைக்கட்டுப்பாட்டை இரத்து செய்து விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.