பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி நடிகை வெண்பா கைது செய்யப்படுவது போன்ற ப்ரோமா காட்சி வெளியாகி ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் சீரியல்களில் பாரதி கண்ணம்மாவுக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு, கணவனால் சந்தேகப்பட்டு நிறை மாத கர்ப்பிணியாக துரத்தப்படும் கண்ணம்மா சுயமரியாதையுடன் வாழ்ந்து காட்டுவதே இச்சீரியலின் சாராம்சம்.
தொடர்ந்து பல டுவிஸ்ட்டுகள் மூலம் முதலிடத்தில் இருந்து வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் அடுத்த பரபரப்பான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
அதாவது, வில்லியாக கலக்கி வரும் வெண்பாவை போலீசார் கைது செய்து அழைத்து செல்கின்றனர்.
2 லட்ச ரூபாய் பணத்தை கொடுத்து, கருக்கலைப்பு செய்ய வெண்பா ஒப்புக்கொண்ட போது, வசமாக சிக்கிக் கொண்டுள்ளார்.
இந்த திட்டத்தை போட்டுக்கொடுத்ததே கண்ணம்மா தானாம், போலீசார் அழைத்து சென்ற போது ஆட்டம் போடும் கண்ணம்மாவின் காட்சிகளும் வெளியாகியுள்ளது.