2015ஆம் ஆண்டு அரச தலைவருக்கான தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான பொது வேட்பாளர் தெரிவில் அமெரிக்காவின் தலையீடு குறித்த தகவல்களை, முன்னாள் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக பதவி வகித்த நவீன் திஸாநாயக்க (Navin Dissanayake) முதன்முறையாக வெளிப்படுத்தியுள்ளார்.
மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராக நிறுத்துவதே அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் திட்டமாக இருந்தது என தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு அவர் கூறியுள்ளார்.
அரச தலைவர் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ வெற்றிபெற முடியாது என, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்திருந்ததாவும்,
பொது வேட்பாளராக சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அல்லது அவரால் முன்னிறுத்தப்படும் ஒருவரை அந்தத் திணைக்களம் ரணிலிடம் தெரிவித்தாகவும் நவீன் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.