கோவிட் தொற்றாளா்களின் எண்ணிக்கையில் நியூஸிலாந்து முதன்முறையாக 200 என்ற எண்ணிக்கையை தாண்டியுள்ளது.
இது, நியூஸிலாந்தின் சுகாதார அமைப்பை மூழ்கடிக்கும் என்று நிபுணர்கள் எச்சாித்துள்ளனர்.
இன்று சனிக்கிழமையன்று நியூஸிலாந்தில் 206 தொற்றுக்கள் அறிவிக்கப்பட்டன. இதில் 200 தொற்றுக்கள் ஒக்லாந்தில் கண்டறியப்பட்டுள்ளன.
எனினும் பிரதம மந்திரி ஜெசிந்தா ஆர்டெர்ன், நாட்டிற்கு எதிர்காலத்தில் சிறந்த காலத்தை உறுதியளிக்கும் வகையில் கருத்துரைத்துள்ளாா்.
அவுஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் அயர்லாந்து போன்ற நாடுகளை ஏற்கனவே முந்திய நிலையில், உலகின் மிக உயர்ந்த தடுப்பூசி விகிதத்தை நியூஸிலாந்து அடைந்துள்ளது.
எனவே இதனை பயனை விரைவில் பெறமுடியும் என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.
இதேவேளை நியூஸிலாந்து சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, 12 வயதுக்கும் மேற்பட்ட 89% மானோா் ஒரு தடுப்பூசி அளவைப் பெற்றுள்ளனர். 78% பேர் முழுமையாக தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனா்.