யாழ்ப்பாணத்தில் தமிழ்பேசும் கட்சிகளின் கலந்துரையாடல் அண்மையில் நடைபெற்ற போது, அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளகூடாது என தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் கூட்டத்தில் கலந்து கொண்டவருக்கு பிரான்ஸிலிருந்து மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் இதனை தெரிவித்துள்ளார்.
செந்தில் தொண்டமானுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை கூறியுள்ளார்.
“கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் தமிழ்பேசும் கட்சிகள் கூடி கலந்துரையாடல் நடத்தியிருந்தனர். அந்த கலந்துரையாடலில் எமது கட்சிசார்பில் ஒருவர் கலந்து கொண்டிருந்தார்.
இந்நிலையில் பிரான்ஸிலிருந்து தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டிருந்த நபர் ஒருவர், கூட்டத்திலிருந்து வெளியேறவேண்டும் என மிரட்டியுள்ளார் என சீ.வி.விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.