அமெரிக்காவை சேர்ந்த ஜான் பிச்சாய பெர்ரி என்ற இளைஞர், டிக்டாக்கில் மனித எலும்புகளை விற்று வரும் ஆச்சரிய சம்பவம் நடந்து வருகிறது.
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தைச் சேர்ந்தவர் ஜான் பிச்சாய பெர்ரி.
தன்னுடைய வீட்டில் மனிதர்களின் மண்டை ஓடுகள், கை, கால், இடுப்பு எலும்புகளை டிக்டாக்கி ல் விற்பனை செய்து வருகிறார்.
ஒவ்வொரு எலும்புக்கும் ஒவ்வொரு விலை நிர்ணயித்து விற்பனை செய்து வருகிறாராம், இதன் விலை இந்திய ரூபாய் மதிப்பின்படி ரூ.1000த்திலிருந்து ரூ.5 லட்சம் வரை விற்பனையாகிறதாம்.
இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும், சட்டத்திற்கு புறம்பான ஒன்று என பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
மேலும் இவருக்கு எப்படி இத்தனை எலும்புகள் கிடைத்தது எனவும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
இதற்கு பதிலளித்துள்ள ஜான் பிச்சாய பெர்ரி “TikTokக்கில் மனித எலும்புகள் விற்பது சட்டவிரோதமானது ஒன்றும் அல்ல.
தன்னிடம் மருத்துவர்கள், எலும்பியல் நிபுணர்கள், மருத்துவ மாணவர்கள், கலைஞர்கள் ஆகியோர் எலும்புகளை வாங்கி படித்து தெரிந்து கொள்வதாகும் தெரிவித்துள்ளார்.