பலத்த மழை காரணமாக விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரித்தமையால் இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
மத்திய மலைநாட்டில் பெய்து வரும் மழை காரணமாக மலையகத்தில் இருக்கின்ற நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றது.
கடந்த தினங்களாக பெய்து வந்த மழையினால் நீரோடைகள், ஆறுகள் என பெருக்கம் எடுத்து நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்பட்டது.
அந்தவகையில் விக்டோரியா நீர்த்தேக்கதின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக இரண்டு வான்கதவுகள் நேற்று இரவு முதல் (08) திறக்கப்பட்டுள்ளன.
மேலும், இதன் காரணமாக குறித்த நீர்த்தேக்கத்திற்கு தாழ் நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் மிகுந்த அவதானமாக செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.