இலங்கை மற்றும் மாலைத்தீவு தொண்டு நிறுவனங்களுக்கு கனேடிய உயர்ஸ்தானிகராலயம் உதவிகளை வழங்குவதாக அறிவித்துள்ளது.
உள்ளுர் முயற்சிகளுக்கான கனேடிய நிதி உதவி (Canada Fund for Local Initiatives (CFLI) ஊடாக இந்த உதவி வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மனித உரிமை மற்றும் அபிவிருத்திக்கான மையம், தேவையான சமூகத்திற்கான கொழும்பு நண்பர்கள் அமைப்பு, கொம்டு கிரிசாலிஸ்ஊடக சட்ட அமைப்பு, ட்ரான்பெரன்ஸி இன்டர்நெசனல் அமைப்பு, வெரிட்டோ ஆராய்ச்சி மையம், பெண்கள் மற்றும் ஜனநாயகம் அமைப்பு என்பனவற்றுக்கு இந்த உதவிகள் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களை வலுவூட்டுதல், அனைவரையும் உள்ளடக்கிய நிர்வாகம், சுற்றுச் சூழல் மற்றும் காலநிலை போன்ற பல்வேறு துறைகளுக்கு இவ்வாறு உதவிகள் வழங்கப்படவுள்ளன.
இந்த நிதி உதவி மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கையை மேம்படுத்துதல், பெண் முயற்சியான்மையாளர்களை ஊக்கப்படுத்தல் போன்ற பல்வேறு திட்டங்களுக்காக வழங்கப்படுகின்றது.
இதற்கமைய,இந்த ஆண்டில் நிதி உதவி பெற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கு அடுத்த ஆண்டில் சிறந்த முன்மொழிவுகளை சமர்ப்பிக்கும் நிறுவனங்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் கனேடிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.