செம்பருத்தி என்ற சீரியல் ஜீ தமிழில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த தொடர் ஆரம்பத்தில் இருந்து நாயகியாக நடித்து வருபவர் ஷபானா.
இவருக்கு திருமணம் எப்போது, காதலர் உள்ளாரா என ரசிகர்கள் நிறைய கேள்வி கேட்டார்கள், அதற்கெல்லாம் அண்மையில் தான் அவர் பதில் அளித்தார்.
விஜய்யில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் வேடத்தில் நடித்துவந்த ஆர்யனை தான் ஷபானா காதலித்து வந்துள்ளார். இருவரும் சமீபத்தில் தங்களது இன்ஸ்டாவில் ஒன்றாக எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்து இந்த சந்தோஷ செய்தியை வெளியிட்டார்கள்.
இந்த நிலையில் இன்று அவர்களுக்கு மிகவும் கோலாகலமாக திருமணம் நடக்கிறதாம். திருமண கோலத்தில் ஷபானா வீடியோவாகவே திருமண தகவலை கூறியுள்ளார்.
View this post on Instagram