மேஷம்
மேஷம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பிள்ளைகளால் உறவினர் நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு தகுந்தாற் போல் ஒருவர் அறிமுகமாவார். வியாபாரம் தழைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். சிறப்பான நாள்.
ரிஷபம்
ரிஷபம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். பிரிய மானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் பாராட்டப்படுவீர்கள். பலிதமாகும் நாள்.
மிதுனம்
மிதுனம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.
கடகம்
கடகம்: சந்திராஷ்டமம் இருப்பதால் வேலைச்சுமையால் உடல் அசதி மனச்சோர்வு வந்து நீங்கும். உறவினர்கள் நண்பர்களால் அன்புத் தொல்லைகள் உண்டு. முன் கோபத்தால் நல்லவர்களை இழந்துவிடாதீர்கள். உதவிக் கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை விட்டுப் பிடிப்பது நல்லது. திட்டமிட்டுச் செயல்பட வேண்டிய நாள்.
சிம்மம்
சிம்மம்: மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
கன்னி
கன்னி: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். தொட்டது துலங்கும் நாள்.
துலாம்
துலாம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் தனித் திறமைகளை கண்டறிவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.
விருச்சிகம்
விருச்சிகம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களிடம் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்ய உதவிகள் கிடைக்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சூட்சமங்களை உணருவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் நிம்மதி கிட்டும். உழைப்பால் உயரும் நாள்.
தனுசு
தனுசு: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். விருந்தினரின் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் நாள்.
மகரம்
மகரம்: கணவன் மனைவி அன்யோன்யம் பிறக்கும். புது முடிவுகள் எடுப்பீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். நிம்மதியான நாள்.
கும்பம்
கும்பம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். போராட்டமான நாள்.
மீனம்
மீனம்: சில காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டாம். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகளால் சங்கடங்கள் வரும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.