யாழ்.போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் பாரிய குருதி தட்டுப்பாடு நிலவியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நோயாளர்களுக்கு தேவையான குருதியை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆபத்தான நிலையை உடனடியாக தவிர்ப்பதற்கு வட மாகாணத்திலுள்ள இளைஞர், யுவதிகள் இரத்ததானம் செய்வதற்கு முன்வருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இரத்ததானம் செய்வது தொடர்பாக 0212223063 , 0772105375 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளலாம் என இரத்த வங்கி அறிவித்துள்ளது.