நாட்டில் பயணங்களை மேற்கொள்ளும் மக்கள் முறையான சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுவதில்லை என பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
மக்கள் இது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவதால் நத்தார் காலப்பகுதியில் நாடு மூடப்படுமா? பாடசாலைகள் மூடப்படுமா? என்ற தீர்மானங்கள் மக்கள் கையில் உள்ளதென சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹன தெரிவித்துள்ளார்.
வார இறுதியில் விடுமுறையைக் செலவிட பல்வேறு பிரேதேசங்களுக்கு மக்கள் பயணிப்பதை அவதானிக்க முடிந்தது. ஆவர் பயணிப்பவர்கள் தற்போது வரையில் சுகாதார ஆலோசனைகளை மீறியே செயல்படுகின்றன.
பாரிய அளவிலான மக்கள் பொது இடங்களில் மக்கள் குவிந்திருப்பதை அவதானிக்க முடிந்துள்ளது. மக்களின் செயற்பாட்டிற்கு அமையவே எதிர்வரும் நத்தரில் நாட்டை முடக்குவதா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.