கொரோனா காலக்கட்டத்தில் பலரும் வீட்டில் இருந்தே வேலை பார்த்து வருகின்றார்கள்.
அவர்களில் பலர் அடிக்கடி சந்தித்து வரும் பிரச்சனைகளில் ஒன்று லேப்டாப் மிகவும் ஸ்லோவாக செயல்படுவது.
இந்த பிரச்சனையை சில எளிய வழிகள் மூலம் தீர்த்திடலாம்.
உங்கள் லேப்டாப் வேகத்தை விரைவாக அதிகரிக்க கீழ்காணும் சில எளிய உதவிக்குறிப்புகளை பின்பற்றுங்கள் போதும்.
ரீஸ்டார்ட் செய்யுங்கள்
உங்கள் லேப்டாப் மிக ஸ்லோவாக இருக்கும்போது அதனை ரீஸ்டார்ட் செய்தால், உங்கள் பழைய மடிக்கணினி நீங்கள் நினைப்பதை விட சிறப்பான வேகத்தில் செயல்படும்.
ரீஸ்டார்ட் தற்காலிக கேச் மெமரியை அழிக்கிறது மற்றும் உங்கள் லேப்டாப்பை புதியதாக தொடங்க அனுமதிக்கிறது.
ஒருவேளை விண்டோஸுடன் தொடங்கும் புரோகிராம்கள் உங்களிடம் இருந்தால், அந்த புரோகிராம்கள் தொடர்பாக நீங்கள் எதாவது செய்தாக வேண்டும்.
அவ்வாறு செய்யாமல் நீங்கள் உங்கள் லேப்டாப்பை ரீஸ்டார்ட் செய்தால் சில எதிர்மறையான நிகழ்வுகளை நீங்கள் சந்திக்க நேரிடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
தேவையற்ற பிரவுசர் டாப்களை கிளோஸ் செய்ய வேண்டும்
உங்கள் வேலையில் நீங்கள் எப்போதும் பிரவுசரை திறந்து வைத்திருக்க வேண்டிய அவசியம் இருக்கும்பட்சத்தில், உங்கள் லேப்டாப் போதுமான வேகத்தில் இல்லாவிட்டால், ஓபன் செய்துவைத்திருக்கும் டாப்களின் எண்ணிக்கையை குறைத்துக்கொள்ளுங்கள்.
பிரவுசர் விண்டோவில் அதிக டேப்கள் திறக்கப்பட்டால், உங்கள் ரேம் மற்றும் செயலியின் டோல் அதிகமாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உங்கள் ஸ்டார்ட் அப் பயன்பாடுகளை அடிக்கடி கவனியுங்கள்
பொதுவாக உங்கள் மடிக்கணினியில் உள்ள ஸ்டார்ட்அப் பயன்பாடுகள் காலப்போக்கில் உங்களுக்கு தெரியாமலேயே உருவாக்கப்படும். இது உங்கள் மடிக்கணினியின் துவக்க நேரத்தை மட்டும் பாதிக்காது.
உங்கள் மடிக்கணினியின் பொதுவான செயல்திறனையும் பாதிக்கும். அவற்றை கிளோஸ் செய்ய, டாஸ்க் மேனேஜரைத் ஓபன் செய்ய வேண்டும்.
இதற்கு Ctrl+Shift+Esc ஐ அழுத்த வேண்டும். அதில் எக்ஸ்பாண்டட் வியூவை கிளிக் செய்து, ‘ஸ்டார்ட்அப்’ டாபுக்கு செல்வதன் மூலம் Windows உடன் தொடங்கும் ப்ரோகிராம்களை நீங்கள் சரிபார்க்கலாம்.
தேவையில்லாத ப்ரோகிராம்களை அன்இன்ஸ்டால் செய்யவும்
புரோகிராம்கள் தானாகத் தொடங்கும் போது அவை திரும்பத் திரும்ப கிளோஸ் ஆவதையும், நீண்ட நேரம் ஓபன் ஆகாமல் இருப்பதையும் நீங்கள் கண்டால், தற்போதைக்கு அந்த ப்ரோகிராம்களை அன்இன்ஸ்டால் செய்வது குறித்து பரிசீலிக்க வேண்டும்.
பயன்பாட்டில் இல்லாத ப்ரோகிராம்களை விட்டு வெளியேறவும்
பயன்பாட்டில் இல்லாதபோதிலும் அதனை பொருட்படுத்தாமல் இயங்கும் ப்ரோகிராம்கள் மூலம் உங்கள் மடிக்கணினியின் வளங்கள் தேவையில்லாமல் செலவாகின்றன. இது உங்கள் லேப்டாப் ஸ்லோவாவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று.
ஆனால் திரையில் ‘எக்ஸ்’ பட்டனை அழுத்துவதன் மூலம் எல்லா ப்ரோகிராம்களையும் வெறுமனே கிளோஸ் செய்துவிட முடியாது. பின்னணியில் என்ன இயங்குகிறது என்பதையும் நீங்கள் கண்காணிக்க வேண்டும்.
இதற்கு Ctrl+Shift+Esc ஐ ஆகிய பட்டன்களை அழுத்த வேண்டும். இப்பொது விண்டோஸ் டாஸ்க் மேனேஜரில் என்ன இயங்குகிறது என்பதைப் பார்ப்பதன் மூலம் உங்களுக்கு தேவைப்படாத ப்ரோகிராம் பைல்களை நீங்கள் கிளோஸ் செய்யலாம்.