நாட்டில் நீர் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் இதுவரையில் தீர்மானம் எடுக்கப்படவில்லை என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கடுமையாக பொருளாதார செருக்கடியை சந்தித்துள்ளதாகவும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பொது முகாமையாளர் திலி ண விஜேதுங்க தெரிவித்துள்ளார்.
மேலும் நீர்கட்டணத்தை அதிகரிப்பதற்கான பொறுப்பு அரசாங்கத்திடமே உள்ளதாகவும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
நாட்டில் எதிர்வரும் நான்கு வருடங்களில் 80 வீதம் நீர் விநியோகத்தினை அதிகரிக்க வேண்டும் என்பதே தமது நோக்கம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.