தற்போது சந்தையில் நிலவும் எரிவாயு தட்டுப்பாடு அடுத்த சில நாட்களில் முடிவுக்கு வரும் என நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
நாளாந்தம் ஒரு இலட்சம் வரையில் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிப்பதற்கு அந்தந்த நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண (Lasantha Alagiyawanna)தெரிவித்துள்ளார்.
மேலும், சந்தையில் சிமெந்துக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு அடுத்த இரு வாரங்களில் நிவர்த்தி செய்யப்படுமென இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
தட்டுப்பாடு நிவர்த்தி செய்யப்பட்டதன் பின்னர் சிமெந்து பொதியொன்று 1,275 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் என அவர் கூறியுள்ளார்.