பிரான்சில் கொரோனாவின் ஐந்தாம் அலை ஆரம்பித்துவிட்டதாக அரச ஊடக பேச்சாளர் கேப்ரியல் அத்தால் கூறியுள்ளார்.
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் தீவிரமாக பரவி வருவதாக, உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் எச்சரித்திருந்தது. இதனால் கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்க வேண்டாம் என்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில், பிரான்சில், கொரோனாவின் ஐந்தாம் அலை ஆரம்பித்துவிட்டதாக அரச ஊடக பேச்சாளர் கேப்ரியல் அத்தால் கூறியுள்ளார். இவர் அங்கிருக்கும் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது, பிரான்சில் கொரோனாவின் ஐந்தாம் அலை மின்னல் வேகத்தில் ஆரம்பித்துள்ளது.
கடந்த ஒரே வாரத்தில் மட்டும், தொற்று விகிதம் 80 சதவீதம் அதிகரித்துள்ளது.
நாள் ஒன்றுக்கு 10, 000 பேருக்கு கண்டறியப்பட்ட தொற்று, தற்போது 18,000 பேருக்கும் அதிகமாக பரவி வருகிறது. பிரான்சின் மொத்த தொற்று வீதம் ஒவ்வொரு 100,000 பேருக்கும் 164 பேர் ஆகும். கடந்த வார ஆரம்பத்தில் இது 100 பேராக இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.