ஆடம்பரம் என்ற பெயரில் நாம் செய்யும் செலவுகள் தான் நாட்டின் பொருளாதாரத்தினையே தாங்கிப் பிடிக்கின்றது. ஆனால் நமது வீட்டின் நிதி நிலையும், நமது வளர்ச்சியும் குறித்து கேட்டால் அதற்கான பதில் இல்லை.
ஆம் இன்று நமது கையில் வரும் பணத்திற்கு செலவுகளுக்கும் பஞ்சமே இல்லாமல் இருக்கின்றது. அத்தியாவசிய செலவுகளைத் தவிர்த்து, நமது மகிழ்ச்சிக்காக வெளியிடங்களுக்கு செல்வது ஆடம்பர செலவாகவே இருக்கின்றது.
பணம் சம்பாதிப்பது செலவு செய்வதற்கு என்று நாம் நினைத்தால், இதில் சேமிப்பு, முதலீடு, வருமானத்தைப் பெருக்குதலும் அடங்கும்.
ஆம் நாம் சம்பாதிக்கும் பணத்தினை திட்டமிட்டே செலவு செய்ய வேண்டும். மாதம் முழுவதும் நீங்கள் செய்யும் செலவுகளை அன்றைய தினமே எழுதி வைத்துக்கொண்டு வரவும். 10 ரூபாயாக இருந்தாலும் எழுதி வைக்க வேண்டும்.
பின்பு மாத இறுதியில் அதனை நீங்கள் அவதானித்தால் தேவையற்ற செலவுகள் என்னவெல்லாம் செய்துள்ளீர்கள் என்பதை தெரிந்து கொண்டு மறுமாதம் சிக்கனத்தினை கடைபிடிக்கலாம்.
ஆரோக்கியமான உணவிற்கு எவ்வளு வேண்டுமானாலும் செலவு செய்யலாம். ஆனால் அதற்காக நாம் பெரிய பெரிய சூப்பர் மார்கெட்டில் பணத்தினை செலவு செய்யக்கூடாது. சில்லறை வணிகர்களிடமே வாங்கலாம்.
ஒரு மாதத்துக்குத் தேவையான மளிகைப் பொருள்களை வாங்கி வைத்துக்கொண்டால் செலவு குறையும். ஆனால் அந்த பொருட்கள் கெட்டுப்போகாமல் முறையாக வைத்துக்கொள்ள வேண்டும். காய்கறியும் வீணாகாமல் வாங்கி பயன்படுத்த வேண்டும்.
பின்பு மின்சாரம், எரிவாயு இவற்றில் சிக்கனம் தேவை. தேவையற்ற இடங்களில் மின்விசிறி, விளக்குகள் எரியாமல் பார்த்துக்கொள்வதுடன், கேஸ் ஸ்டவ்வில் சமைக்கும் போதும் உணவுப்பொருள்களை அடுப்பிலேயே அதிக நேரம் வைத்துவிட்டுக் கவனிக்காமல் விடுவது இவற்றினை தவிர்க்க வேண்டும்.
வாகனங்களுக்கு வீண் செலவு செய்வதை தவிர்க்கவும். ஆடம்பரத்திற்காக மைலேஜ் குறைவாக இருக்கும் வாகனத்தினை வாங்கிக்கொண்டு அதற்கு வருமானத்திற்கு மீறிய வகையில் பணத்தினை செலவு செய்து பெட்ரோல் மற்றும் பராமரிப்பு செலவு தேவையில்லாததாகவும்.
கையில் இருக்கும் பணத்தை ஆடம்பரத்துக்காக, பந்தாவுக்காகச் செலவு செய்யாமல் சேமிக்கவும் முதலீடும் செய்யலாம். குடும்பத்தினரோடு மகிழ்ச்சியாக இருப்பது அவசியம்தான். அதற்காக சினிமா, சுற்றுலா, ஹோட்டலுக்குச் செல்வது போன்றவற்றில் தவறில்லை.
இதனால் பெரும்பாலான எளியவர்கள் பிழைக்கிறார்கள். ஆனால், நம்முடைய திறன் அறிந்து அதற்கேற்ப திட்டமிடலாம். இவற்றுக்கெல்லாம் அதிகமாகச் செலவு செய்துவிட்டு, அத்தியாவசிய செலவுகளுக்குத் திண்டாடுவதில் அர்த்தமில்லை.
இவற்றையெல்லாம் புரிந்து, செயல்படுத்தினால் உங்கள் கையில் என்றும் பணம் தங்கும்.