சின்னத்திரையில் நடிக்கும் பல நடிகைகள் தற்போது வாய்ப்பு கிடைத்து வெள்ளித்திரையில் பிரபலமாகி வருவது தெரிந்த ஒன்று. அந்தவரிசையில், ஒருசில சீரியல்கள் மூலம் சிறு கதாபாத்திர நடிகையாக இருந்து பிரபலமானவர் நடிகை தர்ஷா. குக் வித் கோமாளி மூலம் புகழுடன் சேர்ந்து ரொமான்ஸ் செய்து பெரியளவில் பேசப்பட்டார்.
இதையடுத்து நடிகை ஷாலினியின் தம்பி ரிச்சர்ட் ரிச்சியுடன் ருத்ரதாண்டவம் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகி நல்ல வரவேற்பு பெற்றார். எப்போதும் சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் தர்ஷா, சமீபத்திய போட்டோஷூட்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருவார்.
தற்போது டேட்டூ தெரியும்படியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.
💙நடிக்க தெரிந்தவனுக்கோ உலகம் ஓர் அழகான நாடக மேடை..
ஆனால் நடிக்க தெரியாதவனுக்கோ
உலகம் ஒரு ஆபத்தான
நரகத்தின் மேடை..!💙 pic.twitter.com/ahzKOGFVJB— ❤️Dharsha❤️ (@DharshaGupta) November 23, 2021



















