அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிகள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட சுமார் 58,000 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளது.
நிரந்தர நியமனம் வழங்கப்படுவோருக்கு மாதாந்தம் 41,000 ரூபா சம்பளம் பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.