ஐரோப்பாவில் 2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டு காலத்தில் கோவிட் தொற்றால் மேலும் இலட்சக்கணக்கான மரணங்கள் பதிவாகும் என உலக சுகாதார அமைப்பு புதிய எச்சரிக்கையை வெளிப்படுத்தியுள்ள நிலையில் ஐரோப்பிய நாடுகளில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கபட்டுள்ளன.
அந்த வகையில்,கடந்த 24 மணி நேரத்தில் போலந்தில் 28 ஆயிரத்து 380 புதிய தொற்றுக்களும், 460 கோவிட் மரணங்களும் பதிவாகியுள்ளன.
இதனையடுத்து மீண்டும் சமூக இடைவெளியை பேணும் திட்டங்களை நடைமுறைப்படுத்த போலந்து உட்பட்ட சில நாடுகள் முடிவு செய்துள்ளன.
அதிகரித்துவரும் தொற்றாளர்களை அடுத்து மீண்டும் தற்காலிக கோவிட் மருத்துவமனைகள் செயல்படத் தொடங்கியுள்ளன.