கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகுப்பாதை விபத்துத் தொடர்பில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர்கள் என கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் (Anuradha Jahambath) தெரிவித்துள்ளார்.
படகுப்பாதை விபத்துத்தில் சிக்கி, கிண்ணியா தளவைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் சிறுவர்களை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார். இதன்போது மேலும் கருத்துரைத்த அவர்,
கிண்ணியா – குறிஞ்சாக்கேணியில் ஏற்பட்டதை போன்ற அனர்த்தங்கள், இனிமேல் நடக்காது இருப்பதற்கு அனைவரும் உறுதிகொள்ள வேண்டும்.
இந்த விபத்துக்கான பொறுப்பில் இருந்து யாரும் தப்ப முடியாது ஒருவரையொருவர் நோக்கி விரல் நீட்டும் நேரம் இதுவல்ல, அனர்த்தம் தொடர்பில் அறிக்கை பெறப்பட்டு, பரிந்துரைகள் மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்துடன் கிழக்கு மாகாணத்தில் தற்போது இயங்கும், அனைத்து பாலங்களின் தரம் குறித்து ஆராய விசேட குழுவொன்று அமைக்கப்படவுள்ளதாக” கூறியுள்ளார்.