இலங்கையில் பிரதேச ரீதியாக டெல்டாவின் உப பிறழ்வுகள் உருவாகிக் கொண்டிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் மேற்கொண்டுள்ள ஆய்வில் இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய புதிதாக 2 உப பிறழ்வுகள் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பல்கழைக்கழகம் குறிப்பிட்டுள்ளது.
இதுவரையில் நகர பிரதேசங்களுக்கு அருகில் பரவிய கோவிட் தொற்று தற்போது, கிராமிய பிரதேசங்களில் பரவலாக பரவ ஆரம்பித்துள்ளதாக சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்துள்ளது.