பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் கயல் தொடர் மூலம் அசத்தி வந்த சைத்ரா ரெட்டி, படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கியதாக இன்ஸ்டாவில் தெரிவித்துள்ளார்.
யாரடி நீ மோகினி தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதை வென்றவர் சைத்ரா ரெட்டி.
எப்போதுமே சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய சைத்ரா, அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம்.
இந்நிலையில் படப்பிடிப்பின் போது பைக்கில் இருந்து தவறி விழுந்ததில் காயம் பட்டதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.
இதனால் படப்பிடிப்பில் தொடர்ந்து பங்கேற்பாரா என்ற சந்தேகம் அவரது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
சீரியல் வெளியான சில வாரத்திலேயே டிஆர்பி-யில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.




















