கொரோனா தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ள இந்தியாவுக்கான விமான சேவைகளை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக ஸ்ரீலங்கா விமான சேவை நிறுவனத்தின் தலைவர் அசோக் பத்திரகே தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றுக்கு முன்னர் இருந்ததை போலவே ஸ்ரீலங்கன் விமான சேவையை தொடங்கவுள்ளதாக அவர் தெரிவித்தார். ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் நடவடிக்கைகள் குறித்து சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவுறுத்த இதுவே சிறந்த சந்தர்ப்பம் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் இலங்கையின் மிகப்பெரிய சந்தையாக இந்தியா திகழ்வதாகவும், இந்தியாவுக்கான முழுமையான செயற்பாடுகளை மீள ஸ்தாபிக்க ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் தலைவர் மேலும் தெரிவித்தார்.