நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நேற்று மாஸ்ஸாக வெளியான திரைப்படம் தான் மாநாடு.
இப்படம் நேற்று திரைக்கு வருவதற்குள் பல தடைகளை கடந்து தான் வந்தது, மேலும் இப்படம் வெளியானது முதல் மிக சிறந்த விமர்சனங்களையே பெற்று வருகிறது.
பல வருடங்கள் கழித்து சிம்பு நடிப்பில் பிளாக் பஸ்டர் திரைப்படம் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் அனைவரும் படத்தை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது மாநாடு திரைப்படம் முதல் நாள் தமிழ்நாட்டில் ரூ. 8 கோடிக்கும் மேல் வசூலித்ததாகவும், சென்னையில் 88+ லட்சத்திற்கும் மேல் வசூலித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.