மனிடோபா மாகாணத்தில் Steep Rock பகுதிக்கு அருகே மனிடோபா ஏரியானது பனி பந்துகளால் மூடப்பட்டுள்ளது விசித்திர நிகழ்வாக அப்பகுதி மக்களால் பார்க்கப்படுகிறது.
இதுபோன்ற ஒரு விசித்திர வானிலை நிகழ்வை வாழ்நாளில் பார்த்ததில்லை என்கிறார்கள் அப்பகுதி மக்கள். ஆனால் பனித்துளிகள் காரணமாக இதுபோன்ற நிகழ்வு ஏற்பட்டிருக்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.
Steep Rock பகுதிக்கு அருகே குடியிருக்கும் Peter Hofbauer என்பவர் நாள்தோறும் மனிடோபா ஏரிக்கு சென்று வருபவர். ஆனால் இதுபோன்றதொரு நிகழ்வை தாம் இதுவரை பார்த்ததில்லை என குறிப்பிட்டுள்ளார்.
மனிடோபா பல்கலைக்கழக பேராசிரியர் Julienne Stroeve தெரிவிக்கையில், புகைப்படங்களில் பார்த்த காடிகள் என்னால் நம்ப முடியவில்லை என தெரிவித்துள்ளார்.
ஏரி முழுமையாக பனி பந்துகளால் மூடப்பட்டுள்ள காட்சி உண்மையில் கண்களுக்கும் மனதுக்கும் விருந்து என குறிப்பிட்டுள்ள அவர், உண்மையான காரணம் தொடர்பில் ஆய்வு செய்ய வேண்டும் என்றார். மேலும், இதுபோன்ற அரிய நிகழ்வுகள் ஆர்க்டிக் பகுதியில் வாடிக்கையாக நடக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.