சுகாதார அமைச்சு மற்றும் மீன்பிடி கூட்டுத்தாபனம் இடையில் செய்துக்கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கைக்கு அமைய நாடு முழுவதிலும் உள்ள மத்திய அரசு வைத்தியசாலைகளுக்கு தினமும் விநியோகிக்க வேண்டிய சிகப்பு மற்றும் வெள்ளை வஞ்சிரம் மீன்களை விநியோகிப்பது கடந்த இரண்டு மாதங்களாக தடைப்பட்டுள்ளது.
மீன் விநியோகஸ்தகர்களுக்கு செலுத்த வேண்டிய பல கோடி ரூபாய் பணத்தை மீன்பிடி கூட்டுத்தாபனம் செலுத்த தவறியமையே இதற்கு காரணம்.
இதன் காரணமாக மீன் விநியோகஸ்தர்கள், கூட்டுத்தாபனத்தின் மீன்களை விநியோகிக்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.
ஏற்பட்டுள்ள இந்த நிலைமை காரணமாக நாடு முழுவதிலும் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான வைத்தியசாலைகளில் தங்கியுள்ள நோயாளிகள் மற்றும் அதிகாரிகள் கடும் சிரமங்களுக்கு உள்ளாகி இருப்பதாக கூறப்படுகிறது.