முன்பெல்லாம் ஒரு காலக்கட்டத்தில் போன் வைத்திருந்தாலே பெரிய விஷயமாக பார்க்கப்பட்டது. அதிலும், டச் போன் என்றால் பெரிய அளவில் பேசப்பட்டது. ஆனால் ஸ்மார்ட்போன் காலம் வந்த பின் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எளிதாக வாங்கி பயன்படுத்தும் ஒரு மினி உலகமாகவே மாறிவிட்டது.
சாதரணமாக பத்து ஆயிரம் ரூபாய் போனை கூட எளிதாக வாங்க காலம் வந்துவிட்ட நிலையில், நாட்டின் பொருளாதாரமும் உயர்ந்துகொண்டே செல்கிறது. என்னதான் நாம் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்ட்டு வாங்கி பயன்படுத்தி வந்தாலும், வாழ்க்கையில் ஒரு முறையாவது பலருக்கும் ஐபோன் வாங்கி பயன்படுத்திவிட வேண்டும் என்ற ஆசை இருக்கதான் செய்யும்.
ஆனால், அது எல்லோருக்கும் நடப்பத்தில்லை அதன் விலையாலேயே பலரும் வாங்க மறுக்கின்றனர். அப்படி ஒரு வேளை ஐபோனை வாங்கினால் என்ன செய்யவேண்டும் என்பதை பற்றி இங்கே பார்ப்போம்.
நீங்கள் ஐபோன் அமைப்பிற்கு புதியவராக இருந்தால், முதலில் ஆப்பிள் அக்கவுண்ட்டை உருவாக்க வேண்டும். ஆப்பிள் ஐடி மூலம், கான்டாக்ட்ஸ், காலெண்டர்கள், மின்னஞ்சல்கள் மற்றும் ஆப்ஸ், கேம்கள், மியூசிக், மூவி போன்றவற்றை டவுன்லோட் செய்து வாங்குவதற்கு iCloud முழுவதும் உங்கள் தரவை இணைக்கலாம்.
ஆனால், ஏற்கனவே iOS சாதனம் மற்றும் Apple ID இருந்தால், அதை iCloud உடன் இணைத்துக் கொள்ளலாம். இதனால் ஏற்கனவே உள்ள சாதனத்தில் சேமிக்கப்பட்டுள்ள எல்லா தரவுகளும் ஆப்களும் தானாகவே புதியதாக மாற்றப்படும்.
பழைய ஐடியோடு ஐபோனை தானாக செட் செய்வது எப்படி?
உங்கள் பழைய ஐபோனை அருகிலேயே வைத்துக்கொண்டு புதிய ஐபோனில் உள்நுழைந்து உங்கள் மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.
* உங்கள் ஆப்பிள் ஐடியுடன் புதிய ஐபோனை செட்அப் செய்யும்படி கேட்கும் பாப்அப்பில் உங்கள் ஐபோனில் தொடரவும் என்பதைத் டாப் செய்யவும்.
* உங்கள் புதிய ஐபோனில் தோன்றும் படத்தை ஸ்கேன் செய்ய உங்கள் தற்போதைய ஐபோனைப் பயன்படுத்தவும்.
* இதனைத்தொடர்ந்து, தற்போதைய ஐபோனில் வரும் கடவுக்குறியீட்டை உங்கள் புதிய ஐபோனில் உள்ளிடவும்.
* பின் உங்கள் புதிய ஐபோனில் டச் ஐடி அல்லது ஃபேஸ் ஐடியை அமைக்கவும்.
* உங்கள் சமீபத்திய இணக்கமான பேக்அப்பில் இருந்து உங்கள் புதிய ஐபோனை மீட்டெடுக்க வேண்டுமா இல்லையா என்பதைத் தேர்வுசெய்யவும்.
* உங்கள் புதிய சாதனத்தை iCloud அல்லது iTunes பேக்அப்பில் இருந்து மீட்டெடுக்க, புதிய iPhone ஆக அமைக்கவும் அல்லது Android சாதனத்திலிருந்து தரவை மாற்றவும் போன்ற விருப்பங்களை தேர்வு செய்ய வேண்டும்.
அடுத்து முக்கியமாக ஐபோன் 13 இன் ஸ்க்ரீனை சரிசெய்வது மிகவும் விலை உயர்ந்ததாக இருப்பதால், நீங்கள் ஐபோனைப் பெறும்போது ஸ்கிரீன் ப்ரொடெக்டரை போட்டுக்கொள்வது எப்போதும் நல்லது.