இலங்கையில் ”ஒமிக்ரோன்“ பரவல் ஏற்படுவதை தாமதிக்க மாத்திரமே முடியும் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர் சந்திப்பில் கருத்துரைத்த, சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த புதிய தொற்று எந்த நேரத்திலும் நாட்டுக்குள் பிரவேசிக்க ஏதுக்கள் உள்ளன.
இந்தநிலையில் நாட்டுக்குள் இந்த தொற்று வருவதை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டாலும், தம்மால் தொற்று ஏற்படுவதை தாமதிக்க மாத்திரமே முடியும் என்று ஹேமந்த குறிப்பிட்டுள்ளார்
அத்துடன் புதிய கோவிட் தொற்றுக் காரணமாக நாட்டில் முடக்கலை பரிந்துரைக்கப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பண்டிகை காலத்தில் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டும் என்று பொது சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
பொது சுகாதார அதிகாரிகளின் சங்கத் தலைவர் உபுல் ரோஹன இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.
பண்டிகைக் காலத்தில் பயணத்தடைகளை விதிக்காதுபோனால், நாட்டில் தீவிர நிலை ஒன்றை தவிர்க்கமுடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.