முன்னாள் அமைச்சர் புளத்சிங்களகே சிறிசேன குரே இன்று காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தநிலையிலேயே அவர் இன்று காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1979ஆம் ஆண்டு கொழும்பு மாநகர முதல்வராக தெரிவான அவர், 1989ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டார்.
இதன் பின்னர், முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் அமைச்சரவையில் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.