குக் வித் கோமாளி மற்றும் ஆல்பம் பாடல்கள் மூலம் ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலமானவர் தான் அஸ்வின்.
இவர் தற்போது என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார்.
மேலும் இப்படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று நடைபெற்றது, இதில் படக்குழுவினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இதனிடையே தற்போது இந்த நிகழ்ச்சியால் அஸ்வினை படுபயங்கரமாக கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள். ஆம் அஸ்வின் பேசும்போது தான் 40 கதைகளை கேட்டதாகவும், அந்த கதைகள் அனைத்தையும் கேட்கும் போது தூங்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் கடுப்பான நெட்டிசன் அவரை வீடியோக்களை வெளியிட்டு கலாய்த்து வருகின்றனர். அதுமட்டுமின்றி இப்படத்தின் இயக்குனர் சூப்பர் ஸ்டார் என கூறியதையும் கலாய்த்து வருகின்றனர்.



















