வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வரும் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு PCR பரிசோதனை அறிக்கை தேவையில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
எப்படியிருப்பினும், 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் இலங்கை வருவதற்கு 72 மணித்தியாலங்களுக்கு முன்னர் பெற்றுக் கொண்ட தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்தும் PCR அறிக்கையை விமான நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அவ்வாறு வரும் நபர்கள் கடந்த 3 மாதங்களுக்குள் கோவிட் தொற்றுக்குள்ளாகியிருந்தால் தற்போது அவர்கள் தொற்றுக்குள்ளாகவில்லை என்பதனை உறுதி செய்வதற்காக 48 மணித்தியாலங்களுக்குள் மேற்கொள்ளப்பட்ட ரெபிட் என்டிஜன் பரிசோதனை அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தால் போதுமானதாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அந்த நபர் கோவிட் தொற்றுக்கு உள்ளானார் என்பதை நிரூபிக்க தேவையான ஆவணங்களையும் வைத்திருக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
புறப்படுவதற்கு முன்னர் விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படும் கோவிட் PCR பரிசோதனை தேவையில்லை என்றும் சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.