நாட்டில் புதிதாக எரிவாயு சிலிண்டர் கொள்வனவு செய்வோருக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்கும் போது அதன் மேல் பகுதிகளிலுள்ள வால்வு ஐந்தாண்டுகளுக்குள் மாற்றப்பட்டுள்ளதா என்பதை பரிசீலிக்க வேண்டும் என எரிசக்தி நிபுணர்கள் பொதுமக்களை வலியுறுத்துகின்றனர்.
எரிவாயு சிலிண்டரையும் ஐந்தாண்டுகளுக்கு உட்பட்டதா என ஆய்வு செய்து சான்றளிக்க வேண்டும். அதன்படி, சிலிண்டர் வாங்கும் போது சிலிண்டரிலுள்ள திகதியை கவனத்தில் கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத் தப்படுகின்றனர்.