இந்தியா கிரிக்கெட் அணியின் பிரதான ஆல் ரவுண்டரான ஜடேஜா விரைவில் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது காயம் காரணமாக அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் ஜடேஜா முழங்காலில் காயம் ஏற்பட்டதால் அவரால் இந்திய அணி, அடுத்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ள தென்னாப்பிரிக்கா தொடரில் பங்குபெற முடியாது. இந்திய அணி வருகிற 16 ஆம் தேதி அன்று தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.
தென் ஆப்பிரிக்கா நாட்டில் 3 டெஸ்ட் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.தென்னாபிரிக்கா அணியுடன் மோத உள்ள வீரர்கள் பெயர் பட்டியலில் ஜடேஜாவின் பெயர் இடம்பெறவில்லை.
முழங்காலில் ஏற்பட்ட காயத்தின் அளவு பெரிதாக இருப்பதால் ,அவர் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டியதிருக்கும். அதனால் அவர் ஆறு மாதத்திலிருந்து ஒரு வருடம் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இதன் காரணமாக அவர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் தொடர்ந்து விளையாட தீர்மானித்துள்ளதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது.