எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு கொழும்பு மாநகர சபையானது கொழும்பு நகரில் உள்ள உணவு விற்பனை நிலையங்களில் பாதுகாப்பு பரிசோதனைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக சிரேஸ்ட வைத்தியர் ருவன் விஜயமுனி (Ruwan Wijeyamuni) தெரிவித்துள்ளார்.
கொழும்பு – வடக்கு, மத்திய கொழும்பு, பொரளை, கொழும்பு-கிழக்கு மற்றும் கொழும்பு-மேற்கு ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய சுகாதார வைத்திய அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய ஆறு குழுக்கள் பாதுகாப்பு பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ளன.
மேலும், கொழும்பு நகரில் உள்ள அனைத்து ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் பிற உணவு விற்பனை நிலையங்கள் உணவின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பரிசோதிக்கப்படும்.
இதன்போது, உணவு சட்டத்தை மீறும் உணவு விற்பனை நிலையங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
011 267 6161 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பொது மக்கள் இது தொடர்பில் முறைப்பாடு செய்ய முடியும் எனவும், அதிகாரிகள் 30 முதல் 45 நிமிடங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் வைத்தியர் ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.