அமெரிக்காவில் கென்டகி, இல்லினாய்ஸ், ஒர்கன்சஸ் உள்ளிட்ட பல இடங்களில் சூறாவளி மற்றும் மோசமான வானிலை காரணமாக 70இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என தெரிவி்க்கப்படுகின்றது.
பல வீடுகள் மற்றும் கடடடங்கள் இதனால் சேதம் அடைந்துள்ளன.
அமெரிக்காவின் தென் பகுதியில் அமைந்துள்ளது கென்டக்கி மாகாணம். இந்த மாகாணத்தில் இன்று அடுத்தடுத்து நான்கு முறை பயங்கர சூறாவளிக் காற்று தாக்கியது.
இதனால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்தன. சூறாவளி தாக்குதலில் சிக்கி 70இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என செய்திகள் வெளிவந்துள்ளன.
கென்டக்கி மாகாண வரலாற்றில் ஏற்பட்ட மிகவும் மோசமான சுழல் காற்று இது எனவும் அங்குள்ள ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன.
சுழல் காற்று காரணமாக மேபீல்டு நகரத்தில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.