உலகின் மிகப்பெரிய ஒற்றை கல்லாக உள்ள நீல மாணிக்கம் (Blue sapphire) இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த கல் “ஆசியாவின் ராணி” என்று பெயரிடப்பட்டது . நீல மாணிக்க கல்லின் எடை சுமார் 310 கிலோ என மதிப்பிடப் பட்டுள்ளது.
தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபைக்கு சொந்தமான ஆய்வகத்தில், குறித்த நீலக்கல் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
அதிக மதிப்புமிக்க இந்த நீலக்கல், 15 இலட்சத்தும் அதிக கரட் பெறுமதியானது என அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.