பிரான்சில் மூன்று வாரங்களில் பெய்யவேண்டிய மழை 12 மணி நேரத்திற்குள் கொட்டித் தீர்த்ததால், வீடுகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அத்துடன் நதிகள் நிரம்பி வழிகின்றன.
வெள்ளம் காரணமாக வீடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்காக தீயணைப்புதுறை களமிறக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பிரான்சின் பெரும்பகுதி, மற்றும் வட ஸ்பெயின் ஆகிய பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து, நதிகளும் நிரம்பி வெள்ளம் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைந்ததைத் தொடர்ந்து, வீடுகளிருந்து ஏராளமானோர் வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
வெப்பக் காற்று காரணமாக Pyrenees மலைப்பகுதியில் பனி உருகியதும் வெள்ளத்துக்கு காரணமாக அமைந்துள்ளது.
இந்த பிரச்சினை பல நாட்களுக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல இடங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வரை ஒரேஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.