தலீபான்கள் ஆட்சி நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா, அண்மையில் 1.6 மெட்ரிக் தொன் உயிர்காக்கும் மருத்துவ பொருட்களை அனுப்பியது.
புதுடெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் காபூலுக்கு இந்த உயிர்காக்கும் மருத்துவ பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த நிலையில், இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துள்ள ஆப்கானிஸ்தான், இந்த கடினமான தருணத்தில் இந்தியாவின் உதவி பல குடும்பங்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது
பிராந்தியத்தின் முதன்மையான நாடுகளில் ஒன்றா இந்தியாவுக்கும்- ஆப்கானிஸ்தானுக்கும் இடையேயான உறவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது எனவும் ஆப்கானிஸ்தானின் தாலிபான் ஆட்சியாளார்கள் தெரிவித்துள்ளனர்.